பிரச்சனைகள் வரும்போது எப்படி, முடிவெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து நம் எதிர்கால வாழ்க்கை அமைகிறது. வாழ்வின் பல காலகட்டங்களில் நாம் எடுத்த முடிவுகள் குயவன் மண்பாண்டத்தை உருவாக்குவதுபோல நம் வாழ்க்கையை உருவாக்கி இருக்கின்றன. வாழ்வின் சரியான முடிவு எடுத்தவர்கே முன்னேறி இருக்கிறார்கள்; நாட்டின் தலைவர்கள் சரியான முடிவு எடுக்கும்போதுதான் நாடு நல்வாழ்வு பெறுகிறது. சரித்திரத்தில் இடம் பெறுகிறது. ஒரு தொழிலின் அபிவிருத்திக்கு ஒரு கம்பெனியின் தலைவர் எடுக்கும் முடிவுகள் வழி கோலுகின்றன.