கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் இறையுணர்வு . எழுதியவர்- சித்ரா திருமாவளவன் . திரை இசையில் கவிதைகளின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த கண்ணதாசனின் கவிதைகளில் இறையுணர்வு கலந்த கவிதைகளை பற்றி பேசும் புத்தகம் இது. இருபதாம் நூற்றாண்டுக் கவியுலகில் பாரதி, பாரதிதாசனுக்கு பின் இலகுவான மொழிநடையில் பாமரரும் புரிந்துக் கொள்ளும்படி கவி எழுதியவர் கண்ணதாசன்.33 ஆண்டுகள் திரைஇசை உலகில் 6000க்கும் மேற்பட்ட திரை இசைப் பாடல்களைத் தந்தவர் கவியரசர். அவரின் நாத்திக வாழ்வும் பிற்காலத்தில் ஏற்பட்ட ஆன்மீக பக்தி நாட்டமும் அவரின் பாடல்களில் வெளிப்பட்டன.வாழ்வின் இன்ப துன்பங்கள்,ஏற்ற இறக்கங்கள்,பிறப்பு முதல் இறப்பு வரை அத்தனையையும் அவரின் பாடல்களும் கவிதைகளும் பிரதிபலித்தன. . . அவரின் அனைத்து கவிதைகளையும் ஓரே நூலில் பேசுவது கடினம் என்பதாலேயே இங்கு இறையுணர்வு பற்றி மட்டும் பேசப்பட்டுள்ளது.இறை பக்தியில் அவர் எழுதிய அனைத்து கவிதைகளும் அதன் பொருளோடு இணைக்கப்பட்டுள்ளது