ஜோதிடக்கலை என்பது நம்மால் விவரிக்க முடியாத சமுத்திரம். இக்கலையானது
விண்ணிலுள்ள கிரகங்களையும் நட்சத்திரங்களையும் அடிப்படையாக வைத்து, நமது
முன்னோரால் எழுதப்பட்ட ஒரு விலைமதிக்க முடியாத பொக்கிஷமாகும். இவர்களால்
ஏற்படுத்தப்பட்ட இக்கலையானது விஞ்ஞானத்திற்கு மேலானதும் அப்பாற்பட்டதாகும்
(Above and beyond Science) விஞ்ஞானம் என்பதை விண்ஞானம் என எடுத்துக்கொள்ள
வேண்டும். ஜோதிடக்கலை ஒரு தத்துவரீதியாக அமைக்கப்பட்ட ஒரு எண் எழுத்து
சுரங்கமாகும். இந்த சுரங்கத்தில் அளவிட முடியாத எண்ணங்களும்,
கருத்துக்களும், பொருள்களும் பொதிந்துள்ளன. இவைகளை நாம் அணுகும்போது,
நமக்கு வேண்டியவைகளை எடுப்பதற்கு பல வழிமுறைகளையும், விதிகளையும் நமது
முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஜோதிட சுரங்கப் பாதையில் சென்று சில
முக்கியமான கருத்துக்களை ஆழ்ந்து ஆராய்ந்து பார்ப் பதற்கு இந்த
புத்தகத்தில் ஒரு நவீன சுலபமான வழிமுறைகளைக் கொடுத்துள்ளோம். இவைகளை
அமைப்பதற்கு, நாம் அன்றாடம் உபயோகிக்கும் கடிகாரத் தத்துவத்தை
காட்டியுள்ளோம். இந்த அணுகுமுறை எவராலும் படிக்கக்கூடிய அளவுக்கு எளிய
நடைமுறையில் எழுதியுள்ளோம். இந்த படைப்புக் காரணமான முக்கியமான சில வரிகளை
கீழே கொடுத்துள்ளோம். -