சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்கவோ முடியாது. இந்த கண்ணோட்டத்தில் சனி பகவானைப் பற்றிய சகல விவரங்களும் தரப்பட்டுள்ளன. இந்த முயற்சி ஜோதிட அன்பர்களின் ஆர்வத்துக்கு ஒரு தூண்டுகோல்தான். இதுவே முடிவு அல்ல. இதனைப் படித்து பயன்பெறும் அன்பர்கள் அனைவரும் அஷ்ட ஐஸ்வர்யமும் ஆனந்த வாழ்வும் பெற வேண்டுகிறேன்.