செஃப் மணிவண்ணன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் 15 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.
மேற்கத்திய சமையல்கள், ஆசியா நாட்டு சமையல்களில் முறைப்படி தேர்ச்சி
பெற்று பல விருதுகள் பெற்றுள்ளார்,மும்பையில் நடைபெற்ற உலக சமையல்
கலைஞர்கள் மாநாட்டில் தென்தமிழக உணவுகளின் சிறப்பை எடுத்துக் காட்டி அதன்
மருத்துவ குணங்கள் மற்றும் அதன் சுவையினை சிறப்பாக செய்து காட்டி அனைவரின்
மதிப்பையும் பாராட்டையும் பெற்றவர்.நடைபாதை உணவு விற்பனையாளர்கள் மற்றும்
சமையல் துறையில் ஆர்வமுள்ளவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் தொழில்
சிறக்க பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். தற்பொழுது கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை
அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையின் தலைவராக
உள்ளார்.