திருமதி ஸீலக்ஷண ராஜகோபாலன் அவர்கள் கேக்குகள், ரொட்டிகள் செய்முறைகளைப் பொழுதுபோக்காக அல்லாமல் கலையாகவே கருதி உணவு தாயாரிப்புக் கல்லூரியில் முறைப் படி கற்றவர்கள். அதனல் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குடும்ப பெண்களுக்கு அக் கலையை மிகச் சிறப்பான முறையில் கற்பித்துள்ளார்கள். தொடர்ந்து கற்பித்து வருகிறர்கள். பேக்கிரி கலையில் ஓர் உயர் ஒளி விளக்காக விளங்கும் அவர்கள் எழுதியுள்ள இந்த ஒப்புயர் வற்ற நூல் அவர்களிடம் நேரில் வந்து இக்கலையைக் கற்றுக் கொள்ள முடியாத ஆயிரமாயிரம் தமிழகத்துக் குடும்பப் பெண்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகும்.