உலகெங்கிலும் மக்கள் மனோபாவம் ஒரே மாதிரிதான் உள்ளது. அமைதியாக, ஆரோக்கியமாக, இன்பமாக வாழவே விரும்புகின்றனர்; திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
சில சமயங்களில் எதிர்பார்ப்பவை கிடைக்கிறது; பல சமயங்களில் கிடைப்பதில்லை. கிடைக்காத மனநிலையில் மற்றவர்கள்தான் காரணம் என உணர்ச்சி வயப்பட்டு முடி வெடுத்து, தன் தவறுகளை அலட்சியப்படுத்தி, அல்லலுறுகின்றனர்.