" டாக்டர் ஸ்ரீ குமார் “தமிழில் திணைக் கோட்பாடு” என்ற இந்நூலை படைத்துள்ளார். இவர் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை ஆய்வு மையத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 22 நூல்கள் எழுதி பாராட்டுப் பெற்றுள்ளார்.
நிலமும் பொழுதும் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு மனித வாழ்வைப்புனைவது திணை இலக்கியம் என்றும் ஒவ்வொரு திணைக்குமுரிய முதல், கரு, உரி சிறப்பாக அமையும் போது திணைப்பாடல்கள் உருவாகும் என்றும் “தமிழில் திணைக் கோட்பாடு” என்ற இந்நூலில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
இலக்கிய ஆர்வலர்களுக்கும் இலக்கியம் பயில்வோருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டி நூலாகப் பயன்படும்."