book

இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்

Indhiya Vinveli Eyalin Thanthai Vikram Sarabai

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்பு, நிர்வாக திறன். மிகவும் சாந்தமான குணம், அடுத்தவருக்கு உதவும் மனம் இவையாவும் இன்றும் நமது விண்வெளித்துறையில் உள்ளது என்றால் அவரது முதல் வழி நடத்தல் தான் என்று கூற முடியும்.அன்று நாம் எல்லோரும் வீணாக விண்வெளியில் பணத்தை முடக்குகிறோம் என்று கூறினார்கள். அப்போது அவர் சொன்னார். ஒரு சிலர் நமது விண்வெளி ஆராய்ச்சி தேவையா என்று கேட்கின்றனர். ஆனால் எங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியின் தேவையை பற்றி ஒரு சந்தேகமும் இல்லை. நாம் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளுடன் விண்வெளியில் போட்டி போடும் எண்ணமும் இல்லை. ஆனால் நாம் நமது மக்களுக்கு முன்னேறிய தொழில்நுட்பம் மூலம் நல்ல சேவை செய்ய முடியும் அதில் நாம் யாருக்கும் பின் தங்கியவர்கள் இல்லை என்று உறுதிபட கூறினார். எத்தனை பெரிய தீர்க்கமான எதிர்பார்ப்பு. சிந்தனை.