book

என் கதையும் கீதமும்

En Kathaiyum Geethamum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரசு தாமஸ்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :187
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780227
குறிச்சொற்கள் :போராட்டம், அனுபவங்கள், சம்பவங்கள், தகவல்கள், சரித்திரம்
Add to Cart

மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பது இயல்பு. தனக்கு உண்டாகும் இன்னல்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு, வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால், உடல் ஊனமுற்றவருக்கு போராட்டமே வாழ்க்கையாகிறது. அவ்வாறான சவாலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரு பெண்ணின் சுயசரிதமே 'என் கதையும் கீதமும்'.
தனது ஐந்தாவது வயதில், போலியோவால் பாதிக்கப்பட்டுக் கால்களின் இயக்கத்தை இழந்தவர் சரசு தாமஸ். தன் பெற்றோருக்குப் பாரமாக இருக்க விரும்பாத அவர், திருவனந்தபுரத்திலுள்ள 'செஷயர் ஹோம்'_ல் சேர்ந்தார். சரசு தாமஸ், தனது அனுபவங்களை கல் நெஞ்சும் உருகும்வண்ணம் எழுதியுள்ளார். அவருடைய வாழ்க்கையை தூரத்திலிருந்து பார்க்கும்போது சாதாரணமாகவே தோன்றும். ஆனால், அவரது எழுத்துக்களை வாசிக்கும்போது, அசாதாரணமான அனுபவங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த நூலைப் படிப்பவர்கள், தங்களின் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு, புது உத்வேகத்தை அடைந்து, இன்னல்களைத் தகர்த்தெறிந்து, வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வது உறுதி.

'என் கதையும் கீதமும்' ஒரு சுயசரிதை நூல்தான் என்றாலும், சமூக நாவலுக்கு உரிய அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. மொழியாக்கமும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, ஒரு சிறந்த நாவலைப் படித்த திருப்தியும், மனதை வருடிச் செல்லும் ஓர் இனிய கீதத்தைக் கேட்ட அனுபவமும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.