ஆரோக்கியம் உங்கள் கையில்
₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பி.எஸ்.லலிதா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184767636
Add to Cartமனித உடல் ஒரு தானியங்கி இயந்திரம். உடலின் உள் உறுப்புகள் யாவும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியது. இயற்கையின்றி மனித வாழ்வு இல்லை. பிரபஞ்ச சக்தி இன்றி உடலுக்கு சக்தி இல்லை. மருந்து, மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை, ஸ்கேனிங் என ஓடி ஓடிக் களைத்த மக்கள் அவற்றால் நிரந்தரத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். நம் உச்சி முதல் பாதம் வரையிலான உடலின் முக்கிய உறுப்புகள் உள்ளங்கையில் புள்ளிகளாக அமைந்திருக்கின்றன. எந்தெந்த உறுப்பு எந்தெந்த புள்ளியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடல் உபாதைக்கு தீர்வு தரலாம் என்கிறது ரெய்கி என்னும் மருந்தில்லா மருத்துவ முறை. இதற்கு மருந்து மற்றும் மாத்திரையோ தேவையில்லை. தினந்தோறும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறமுடியும். `உடல் ஆரோக்கியம் பற்றி விழிப்புஉணர்வு அடைந்து ரெய்கி, யோகா, அக்குபஞ்சர் போன்ற மருந்தில்லா மருத்துவ சிகிச்சையை மக்கள் நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் மூட்டுவலி, கழுத்துவலி, இதயம், கல்லீரல், முதுகுவலி, மூச்சுத்திணறல், தூக்கமின்மை, இதய நோய்கள், கர்ப்பக்கால பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டு' என்கிறார் நூலாசிரியர் டாக்டர் பி.எஸ்.லலிதா. மேலும், எந்தெந்த நோய்களுக்கு எப்படி தீர்வுபெற முடியும் மற்றும் சுறுசுறுப்பான, துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது சாத்தியம் என்பதை எடுத்துரைக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் `மருந்தில்லா மருத்துவம்' என்கிற பெயரில் வெளியான கட்டுரைகள், நிரந்தர ஆரோக்கியத்தை உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறது.