book

தமிழுக்கு கலைஞர் என்று பெயர்

Tamilukku Kalainjar Endru Peyar

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர். ரகுநாதன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

கலைஞர் பிறந்தார். இதனால் தமிழ்த்தாய் தலை நிமிர்ந்தாள். தமிழர்களின் நிலையை உயர்த்தினார். கலைஞரின் பேச்சாற்றலால் தமிழ் வளர்ந்தது: அரசு மொழியாய்ச் சிறந்தது; செம்மொழியாய் இன்று செழிக்கின்றது. அனைத்துச் சுவைகளும் அமையப்பெற்று, அனைவராலும் போற்றக்கூடிய செய்திகளை உள்ளடக்கி எல்லோரும் விரும்புக் கூடிய இலக்கியமே காவியமாகும். அந்த வகையில் அனைத்து ஆற்றல்களும் பொருந்தி, இன்று அனைவராலும் மதிக்கப் பெற்றுக் காலந்தந்த காவியமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் நமது கலைஞர். இவர் தமது பேச்சால், எழுத்தால், செயலால் பன்முக ஆற்றலால் காவியமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். சிலர் வரலாற்றை எழுதுகிறார்கள். சிலர் வரலாற்றில் இடம் பெறுவார்கள். ஆனால் வாழும்போதே வரலாறு ஆனவர் பல ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பாடப் பொருளாய், பல இளங்கவிஞர்களுக்குப் பாடுபொருளாய், மொத்தத்தில் காலம் தந்த காவியமானவர்தான் கலைஞர்.