book

இராக தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :இராமநாதன் பதிப்பகம்
Publisher :Ramanathan Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :212
பதிப்பு :2
Published on :2012
Out of Stock
Add to Alert List

இசையை, இறை பக்திக்கு அர்ப்பணித்த காரணத்தால், அநேக, கீர்த்தனங்களும், பாடல்களும் கிடைக்க வாய்ப்பேற்பட்டது. தனி மனிதப் புகழ்ச்சிக்குப் புறம்பாக, பக்தியை வளர்க்க மட்டுமே இதைப் பயன்படுத்தி வந்த காரணத்தால், காலங்காலமாக நம் நாட்டில் சங்கீதம் அதன் வளர்ச்சி குன்றாமல் வளர்ந்து வந்திருக்கிறது. யாகங்கள் பல செய்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய இறை அருளை, இசையின் மூலம் வெகு சுலபமாகப் பெற்றுவிட முடியும் என்பது ஆன்றோர் துணிவு. இதனாலன்றோ, தியாகையர் போன்ற மகான்கள் தங்கள் வாழ்க்கையைச் சங்கீதத்திற்கே அர்ப்பணம் செய்து, ' யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என, இன்னும் சுலபமாகச் சங்கீதத்தை அனுபவிக்க ஆயிரக் கணக்கான கீர்த்தனைகளை, அற்புதமான இராகங்களில் வடித்துத் தந்திருக்கிறார்கள்!
அணு யுகத்தில் வாழ்ந்து வரும் நம் சந்ததிக்கு ஸ்வரம் அமைத்து இராகத்தையும் கண்டு பிடித்து கீர்த்தனம் எழுதிப் பாட நேரமிருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தில், அவர்களுக்கு எவ்வித பிரயாசையும் கொடுக்காமல் நூற்றுக்கணக்கான இராகங்களையும், ஆயிரக் கணக்கான கீர்த்தனைகளையும் நம் முன்னோர் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.