book

கண்ட நாள் முதல்

Kanda Naal Muthalai

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ் நிவேதா
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

லிரியா கடகடவெனச் சிரித்தாள். “பள்ளியில் படிக்கும் சமயத்தில்கூட நீ டேட்டிங் போனதில்லை. நீ சரியான இண்டியன் என்று அவனுக்குத் தெரியாது போலிருக்கிறது." "நான் முழுக்க இந்தியன் என்று சொல்ல முடியாது லிரியா. இந்தியாவை நான் பார்த்ததேயில்லை. பிறந்து இங்கே அமெரிக்காவில்தான். டேட்டிங், ப்ரீசெக்ஸ் போன்ற பழக்கங்கள் இல்லை என்றாலும் கூட நான் மிக சுத்தமானவள். இந்தியாவில் என்னளவு சுதந்திரமாய் முடிவெடுக்கும் உரிமை பெண் களுக்கு கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்." லிரியா நட்புடன் அவள் தோள்களைப் பற்றினாள். "வெல். இந்த ஆராய்ச்சி எல்லாம் எதற்கு? நாம் எங்கே பிறந்தாலும் எங்கிருந்து வந்தாலும் மனிதர்களாய் இருப்பது தான் முக்கியம்." "சத்தியமான வார்த்தை" என்றாள் ரோஷிணி அவள் கைகளைப் பற்றி. இருவரும் ஒரே டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் வேலை செய்வதால் லிரியாவும் ரோஷிணியின் காரில் அவளுட னேயே வந்தாள். இருவரும் பேசியபடியே பயணம் செய்தவர்கள் டிபார்ட்மென்ட் ஸ்டோரை அடைந்து தங்கள் வேலையை தொடங்கியதும் அதில் ஒன்றிப் போனார்கள். ரோஷிணி மாலையில் வேலை முடிந்து வீட்டை அடைந்து பார்க்கில் காரை நிறுத்திவிட்டு தன் வீட்டுக் காலிங்பெல்லை அழுத்தும்போது இரவு மணி எட்டாகி கதவைத் திறந்த பூனம் "ஹாய்" என்றாள் மகிழ்ச்சியுடன்.