
உன்னை நான் சந்தித்தேன்
Unnai Naan Santhithen
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :7
Published on :2017
Out of StockAdd to Alert List
சம்ருதா, அதோ உன் அம்மா வருகிறார்கள், பார்!'' என்று அவள் நடத்தி வரும் நர்சரிப் பள்ளியின் கடைசிக் குழந்தையை, அவளுடைய தாயிடம் ஒப்படைப்பதற்காக, வகுப்பறையில் இருந்து, தரங்கிணி வெளியே கூட்டி வந்தாள். "என்னங்க, சம்ரூச் செல்லம் தொல்லை பண்ணாமல் சமத்தாக இருந்தாளா?" என்று புன்னகையோடு கேட்டபடி, தரங்கிணியின் கையில் இருந்த புத்தகப் பையையும் சிற்றுண்டி, தண்ணீர்க் கூடையையும் வாங்கிக் கொண்டாள், இரண்டரை வயது சம்ருதாவுடைய தாயார். எல்லா அன்னையரையும் போலவே, அவளும் நின்று பேச விரும்புவதைத் தரங்கிணியால் ஊகிக்க முடிந்தது! ஆனால், அதில் இரண்டு பிரச்சினைகள்!
