
இதயங்கள்
Idhyangal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதா கணேசன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2002
Out of StockAdd to Alert List
மாலை கன்னி மஞ்சள் குளித்துக் கொண்டிருந்தாள்! அவள் குளிப்பதைக் கண்டு, நாணங்கொண்டு, தாமரை கண்களை பொத்திக்கொண்டது! அவள் காதலன் அல்லியோ கடைக்கண்ணால் அவளது கொள்ளை எழிலை சுவைத்துக் கொண்டு இருந்தான்! கன்னியர் குளிக்கும் படித்துறையில் காளையர் வட்டமிடுவது போல, மாலைக்கன்னி குளிக்கும் அழகைக்காண பறவைகள் விரைந்து வந்து கொண்டே இருந்தன! மாலைக்கன்னியின் மேலாடையைத் தூக்கிச் செல்ல தென்றல் தவழ்ந்து வந்து கொண்டு இருந்தது! அந்தத்தென்றல், நெற்கதிர்களுக்குத் தாலாட்டுவது போல இருந்தது! தொட்டில் ஆட்டுவது போலவும் அசைந்தன!
