book

சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும்

Saathira PeiKalum saathikathaikalum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.வி. சுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :126
பதிப்பு :4
Published on :2004
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

"பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிட பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா."

இவ்வாறு சமுதாயத்திற்கும், அதன்  வளர்ச்சிக்கும் எதிராக பாதகம் செய்துவரும் சமூக்க் கொடுமைகளைப் புரியும் கொடியவருக்கும் எதிராகப் பாப்பாவுக்குத் துணிவும் தெளிவும் புகட்டுகிறார் பாரதி.  அம் மகாகவியின் உணர்வினை மனதில்கொண்டு இந்நூலாசிரியர் எம்.வி.எஸ் அவர்கள் பாப்பாவுக்குக் கதைகள் கருத்துக்கள் சொல்லுவது போன்ற யுக்தியினைக் கையாண்டு சமுதாய வளர்ச்சி - சமுதாய முன்னேற்றத் திசைவழியில் அழைத்துச் செல்ல  தம்பி தங்கைகளுக்கு கடிதங்களாக எழுதியுள்ளார்.  எனவே வளர்ந்து வரும் இளம் சந்ததிகளுக்குச் சாத்திரக் கதைகளைச்சொல்வது போலவும், கருத்துக் கட்டுரை வடிவிலும் இந்நூலின் உருவம் - உள்ளடக்கப் பாங்கினை அமைத்துள்ளார் ஆசிரியர்.

நமது நாட்டின் உழைக்கும் பூர்வீக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் - ஒதுக்கப்பட்ட மக்கள் என்று கருதி, அத்தகைய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சமூக்க் கொடுமைகளின் ஆணிவேர் என்ன?  சாதிக் கலவரங்கள் என்று பெயர் சூட்டித்தூபமிட்டு வளர்க்கவும், அத்தகைய கோரமான சமூக வெடிப்புகள் நாடேங்கிலும் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன?  இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எவ்வாறு?  இது போன்ற வினாகளுக்கு விடை காணும் அடிப்படைப் பிரச்சினையேயாகும். இத்தகைய சமுதாய விஞ்ஞானப் பார்வை தருவதே மார்க்சிய லெனியப் பார்வை என்பதன் பொருள்.  இந்தக்கருத்துக்களை மையமாக வைத்து எழுதப்ட்டதே "சாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும்" என்ற நூலாகும்.