டயலாக்
Dialogue
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகடன் பிரசுரம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
Add to Cartஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவர்கள்... நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்.
போட்டி என்று வைத்தால், அது எந்த விஷயமானாலும் கருத்தாழத்தோடு எழுதி குவிப்பார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், 'ஊர் உலகத்தில்தான் எத்தனை சுவாரஸ்யமான பேச்சுக்கள்... காதைத் தீட்டிக்கொண்டு, ஒட்டுக் கேட்டு, நறுக்கென்று எழுதி அனுப்புங்களேன்' என்று ஒரு போட்டி வைத்தோம். 'வித்தியாசமாக ஏதாவது வந்தால், இரண்டொரு இதழ்களுக்குப் பிரசுரிக்கலாம்' என்பதுதான் எங்கள் எண்ணம். ஆனால், வாசக மகாசக்தி எழுதிக் குவித்த பேச்சுத் துணுக்குகள், நாங்களே அதுவரை அறிந்திராத முற்றிலும் புதுமையான ஒரு சுவையோடு அசத்தின.
'டயலாக்' என்று தலைப்பைக் கொடுத்து, இதழ்கணக்கில் எங்களையும் அறியாமல், அவற்றைத் தொடர்ந்து பிரசுரிக்க ஆரம்பித்தோம். மாதங்கள்... ஏன், வருடங்கள் பல உருண்டோடியபோதும், வாசகர்களிடமிருந்து 'டயலாக்'குகள் வருவது கூடியதே தவிர... குறையவில்லை! டீக்கடையில், மரத்தடியில், தபால் ஆபீஸில், கட்டணக் கழிப்பறை வாசலில்கூட யாராவது காதைச் சாய்த்துக்கொண்டு நின்றால், 'ஹலோ! நீங்க ஜூ.வி. வாசகரா? டயலாக் அனுப்ப மேட்டர் தேத்தறீங்களா?' என்று பரஸ்பரம் விசாரித்துக்கொள்வது வேடிக்கையான வழக்கமாகிப் போனது.
அரிசி விலையேற்றத்திலிருந்து அமைச்சரவை உருட்டல் வரை... ரஜினி அரசியல் பிரவேசம் முதல் ரம்பா அழகு நடை வரை... வீரப்பன் காடு முதல் புருஷன் _ பொண்டாட்டி சண்டை வரை... எதையுமே வாசகர்கள் விட்டுவைப்பதில்லை! இன்றைக்கும், 'ஜூ.வி. கைக்கு வந்ததும் முதல்ல படிக்கறது டயலாக்தான்' என்று தயங்காமல் சொல்லுகிற வாசகர்கள் ஏராளம்.
அந்தந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பரபரப்பாக, பிரபலமாகப் பேசப்பட்ட எந்தவொரு விஷயமுமே இந்தப் பகுதியில் இடம்பெறத் தவறியதில்லை. அந்த வகையில், 'டயலாக்' என்பது காலத்தைப் பிரதிபலக்கும் மக்களின் நாடித்துடிப்பாகவே இன்றுவரை அப்படியே தொடர்கிறது!
பல சமயங்களில் பேட்டிக்கு எங்கள் நிருபர்கள் போகும்போது, 'எப்போது 'டயலாக்'குகளைத் தொகுத்துப் புத்தகமாகத் தரப்போகிறீர்கள்?' என்று பல வி.ஐ.பி_க்களே ஆர்வத்துடன் கேட்பதுண்டு. மலையளவு பிரசுரமான டயலாக்குகளிலிருந்து எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற பிரமிப்பிலேயே அந்த முடிவை நான் ஒத்திப்போட்டுக்கொண்டு வந்தேன்.
வாசகர்களுக்கான டயலாக் பகுதி ஆரம்பித்து, ஒரு டஜன் வருடங்கள் கழித்து இப்போதுதான் நேரம் வாய்த்திருக்கிறது. இந்த வண்ணமிகு தொகுப்பு உங்களையெல்லாம் நிச்சயம் மகிழ்வூட்டும். அந்தப் பெருமை முழுக்க முழுக்க வல்லமை படைத்த ஜூ.வி. வாசகர்களையே சாரும்.