என் பெயர் மரியாட்டு
En Peyar Mariyaatu
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரியாட்டு கமாரா சூசன் மெக்கிளிலேண்ட்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184763249
Add to Cart“கோழியோ, ஆடோ வளர்ப்பது லாபமானது &ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்ப்பதைவிட!” & இப்படி ஒரு வார்த்தை தன் காதில் விழுகிறபோது, இந்த நிஜக் கதையின் நாயகி மரியாட்டு மிகவும் துடித்துப் போகிறார். ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குக் கரையோரம் உள்ள சியாரா லியோனி நாடு பொருளாதார ரீதியாக ஏழைதான். ஆனால், இயற்கை ரீதியாக மிகுந்த வளப்பம் கொண்டது. ஆனால், அந்த வளங்களை அனுபவிக்க முடியாமல் வஞ்சிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அந்த தேசத்தில் மூண்டுவிட்ட உள்நாட்டுக் கலவரம், அந்த நாட்டு மக்களின் கள்ளமில்லாத வாழ்க்கைக்குள் எப்படிப்பட்ட பூகம்பங்களை உருவாக்கியது என்பது தனியரு பெண்ணின் வாழ்க்கை மூலமாகவே சொல்லப்பட்டிருக்கிறது இந்த நூலில். வானத்திலிருந்து அடிப்பட்டு விழுகின்ற ஒரு தூக்கணாங்குருவி, மருந்திட்டுத் தடவிக் கொடுக்க யாருமில்லாத வெற்றுப் பிரதேசத்தில் தரையில் கிடந்து துடிக்கிறது. தனக்குள் தானே அமைதிகொண்டு யோசிக்கிறது. அசைவற்று சிறிது நேரம் கிடந்துவிட்டு... விருட்டென்று எழுந்து அது உயரப் பறக்கிறது. அசைவற்றுக் கிடந்த அந்த நிமிடங்களில் அந்தக் குருவிக்குள் புகுந்து நம்பிக்கை கொடுத்த சக்தி எது? நூலை வாங்கிப் படியுங்கள்.. புரியும்.