
அழகிய தவறு
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகேந்திரன்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2007
Out of StockAdd to Alert List
“அபாரம்டா ரிக்கி” என்று உதட்டை விரிக்காமலேயே, கையைப் பிரிக்காமலேயே
‘கைதட்டினார்’ ஹரிஹரன். கீதாவுடன் அங்கே வந்த ரிக்கி, அவரை ஒரு
புதுமுகமாய்ப் பாவித்து, முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல் அவரைப்
பார்த்த ரிக்கியின் புதிய பார்வை அப்படி அபாரமாக இருந்தது.
“அப்பா இது யார் தெரியுமா?” -துள்ளி வந்தாள் கீதா. அந்த முகத்தில் எவ்வுளவு ஆழமான குதூகலம்!
“நல்லாவே தெரியும்மா. இவ்வளவு நேரமா சித்தார்த் சொன்னதையெல்லாம் கேட்டதுக்கு அப்புறம்.” என்ற அவரை இடைமறித்தான் கீதா.
“உங்களுக்கும் சந்தேகம் வந்திடுச்சா…?” குப்பென்று கோபம் வந்தது கீதாவுக்கு.
“எனக்கா? சந்தேகமா? நானே சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட டாக்டர்னு பேர் எடுத்தவன். எக்ஸ்ரே, ப்ளட் டெஸ்ட், அது, இதுன்னு பார்க்காம, பேஷண்ட்டோட முகத்தைப் பார்த்தே அவனுக்கு என்ன வியாதின்று சொல்லிடுவேன்”
*ரிக்கி… நீ அறைக்குப் போயி இதையெல்லாம் வச்சிட்டு வா” என்று ரிக்கியை அனுப்பிவிட்டு தந்தையிடம் திரும்பினாள் கீதா.
