book

தமிழ் இலக்கிய வரலாறு

Thamizhil Ilakkiya Varalaru

₹480+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் மு. அருணாசலம், முனைவர் இராஜா வரதராஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :764
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788123441184
Out of Stock
Add to Alert List

முன்தோன்றி மூத்த குடி" தமிழ்க்குடி - என்பதற்கேற்பப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழினம்: அவ்வினம் பேசிய மொழி தமிழ்மொழி. ஓர் இனத்தைப் பற்றி எடை போடுவதற்கு அதன் இலக்கியங்கள், இலக்கணங்கள் போதும். தமிழ்மொழி இலக்கிய, இலக்கண வளமுடையது என்பதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம் மூலம் அறியலாம். இலக்கிய வரலாறுகள் முறையாகப் பதிவு செய்யப்படாத காரணத்தால், தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்ற நூல்களின் காலம், இயற்றிய புலவர்கள் பற்றிய வரலாறுகளை முழுமையாக அறிய முடியவில்லை. அவை கட்டுக் கதைகளாகவும், உண்மைக்குப் புறம்பானவையாகவும் இன்றுவரை உலாவிக் கொண்டிருக்கின்றன. இலக்கிய, இலக்கணங்களைப் பற்றி அறிய இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்பட வேண்டும். அவ்வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் காசு.பிள்ளை எழுதினார். கா.சு.பிள்ளையைத் தொடர்ந்து மு.அருணாசலம், மு.வரதராசன், ஞா.தேவநேயப்பாவாணர், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், எம்ஆர்அடைக்கலசாமி, க.வெள்ளைவாரணன், சி.பாலசுப்பிரமணியன், மது.ச.விமலானந்தம், தமிழண்ணல், ச.வே.சுப்பிரமணியன், சிற்பி பாலசுப்பிரமணியம் & சொ.சேதுபதி, ச.சுபாஷ்சந்திரபோஸ் போன்றோர் தமிழ் இலக்கிய வரலாற்று நூலை எழுதியுள்ளனர். இப்போது தேவிரா, எப்.பாக்யமேரி, கா.வாசுதேவன், கா.கோ. வேங்கடராமன், பூவண்ணன், கி.இராசா,ப.ச.ஏசுதாசன், சோம். இளவரசு, பா.இறையரசன், சி.கி.லட்சுமணன், திருமதி அ.ஜெயம் & சந்திரலேகா வைத்தியநாதன், அருணன், சு.ஆனந்தன், பெ.சுயம்பு, வி.செல்வநாயகம், பாலூர் கண்ணப்ப முதலியார், ஜெ.ஸ்ரீசந்திரன், கமலா முருகன் ஆகியோரும் தமிழ் இலக்கிய வரலாற்று நூலை வெளியிட்டுள்ளனர். இ.எஸ்,வரதராச ஐயர், ச.சாமிமுத்து, புது.ச.சோமசுந்தரம். கூ.கு.அருணாசலம், இரா.சீனிவாசன், மு.சு.அருள்சாமி, கா.மாயாண்டி பாரதி, ஆ.ஜெபரத்தினம், ம.செ.ரபிசிங், ப.சங்கரலிங்கம், கிராக்கி ஆகியோரும் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ளனர்.