book

சிவகாமியின் சபதம்

Sivagamiyin Sabadham

₹500
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :1256
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934748
குறிச்சொற்கள் :கற்ப்பனை, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

நீல வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப் பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதி குடிகொண்டு விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கிடந்த வங்காளக் குடாக் கடலில் சந்திரக் கிரணங்கள் இந்திர ஜாலவித்தை செய்துகொண்டிருந்தன. கரையோரத்தில் சின்னஞ்சிறு அலைகள் அதிக ஓசை செய்து அமைதியைக் குலைக்க விரும்பாதவைபோல் இலேசான சப்தத்துடன் எழுந்து விழுந்து கொண்டிருந்தன.