சின்னத் தப்பு பெரிய தப்பு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
Sinnath Thappu Peariya Thappu (Irantu Naavalkal Konta Nool)
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2021
Add to Cartகையெழுத்தை ஸ்டாம்ப்பின் மேல் கிறுக்கிவிட்டு ரூபாய் நோட்டுக்களை மட்டும் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு சில்லரைகளை மேஜை மேலேயே விட்டுவிட்டு நடந்தான். சென்ட்ரி விக்கெட் கதவை அவனுக்காகத் திறக்க வெளிச்சமான வாசலுக்கு வந்தான். விக்கெட் கதவு மறுபடியும் சாத்திக் கொண்டது. குமரேசன் விடுலைக் காற்றை நீளமாய் சுவாசித்தான். பனி மஸ்லின் துணி மாதிரி சுற்று வட்டாரத்தைப் போர்த்தியிருக்க தூரத்து ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தான். முன்பாக நின்றிருந்த ஆட்டோவில் ஏறி இடத்தைச் சொல்ல ஆட்டோ கோவையின் காலை வீதிகளில் குலுங்கியது. ஆட்டோ ஓட ஓட - பெட்டிக் கடைகளில் தொங்குகிற நியூஸ் பேப்பர் போஸ்டர்களில் தலைப்புச் செய்திகள் படிக்க முயற்சித்தான். பேண்ட் பாக்கெட்டில் எதுவோ அழுந்த கைவிட்டுத்துழாவினான். ஆறு மாசத்துக்கு முன்னால் ஜெயிலுக்குப் போன போது உள்ளே வைத்திருந்த சின்ன டைரி, லைட்டர் ஒரு பேனாக்கத்தி, பால்பாயிண்ட் பேனா தட்டுப்பட்டது. ஒரு பெட்டிக்கடை அருகே ஆட்டோவை நிறுத்தி, சிககெரட் பாக்கெட் ஒன்றை வாங்கி அங்கேயே பிரித்து - சிகரெட் ஒன்றை உருவி - உதட்டில் பொருத்தி லைட்டர் ஜ்வாலையில் அதற்கு உயிர் கொடுத்தான். சிகரெட்டின் ஆயுள் முடிந்தபோது - ஆட்டோ அந்த டெரஸ் வீட்டின் முன்னால் நின்றது. தீர்ந்த சிகரெட்டை வீசிவிட்டு சார்ஜ் தந்துவிட்டு வீட்டு வாசற்படி ஏறினான். காலிங்பெல்லை வீட்டுக்குள் கதறவிட்டான்.