book

மண்ணின் மரங்கள்

Mannin Marankal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திக், தமிழ்தாசன்
பதிப்பகம் :தன்னறம் நூல்வெளி
Publisher :Thannaram Noolveli
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :60
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

படிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பிதான் இம்மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வந்திருக்கிறது. சாலை யோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாய்த்துவிட்டு, அதற்கு பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்கு பழக்கப்படாத தூங்குமூஞ்சிவாகை, குல்முகர் போன்ற அயல்தாவர மரவகைகள்தான் நடப்படுகிறது. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்து வந்த உயிரினங்கள் உணவற்று அழிந்துபோகிறது. அதனால் சூழலியல் சமநிலை பாதிக்கபட்டு, பல்வேறு வித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல ... இயற்கை வாதம்.