book

நள்ளிரவு வானவில்

Nalliravu Vaanavil

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ் குமார்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

"போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்." "வாங்க... வாங்க!" - வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்தவாறு சந்திரசூடன் நிமிர, எதிரில் அவருடைய மகள் மீரா கோபக் கனல் உமிழும் கண்களோடு நின்றிருந்தாள். மீராவுக்கு இருபத்தி மூன்று வயது. ஐம்பது கிலோ எடையைத் தாண்டாத ஒடிசலான உடம்புவாகு. பெரிய கரிய கண்கள். அடர்த்தியான தலைமுடி 'ஒற்றைப் பின்னலாய் மாறி, முதுகில் ஒரு கறுப்பு அருவியாய் வழிந்தது. சந்திரசூடன் மகளை ஏறிட்டார். "போன்ல மாப் பிள்ளையோட அப்பா பேசினார்ம்மா..." "அதுதான் தெரியுதே! ஏம்பா... இப்படி கூழைக் கும்பிடு போடறீங்க? மாப்பிள்ளை வீட்டுக்காரங் கனா மரியாதை குடுக்க வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? நீங்களும் ஒண்ணும் சாதாரண நபர் கிடையாது. இண்டஸ்ட்ரியலிஸ்ட் சந்திரசூடன்னு சொன்னா டெல்லி வரைக்கும் தெரியற ஒரு பர்சன்.'' சந்திரசூடன் எழுந்து வந்து மகள் மீராவின் தோள் மேல் மெதுவாய் கையை வைத்தபடி சிரித்தார். “என்ன இருந்தாலும் பெண்ணைப் பெத்தவனுக்கு இந்த விஷயத்துல உயரம் கொஞ்சம் கம்மிதான்.