book

சித்ராங்கதா!

Chitrangatha!

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ் மதுரா
பதிப்பகம் :மூவர் நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :556
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

2014 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்த சித்ராங்கதா நாவலில் இருந்து சில வரிகள்: இன்று மறக்காமல், முக்கியமாக அம்மாவுக்குத் தெரியாமல், அப்பாவிடம் காசு வாங்கி, மாலை நாடார் கடையில் புதிய ரிப்பன் வாங்கிவிடவேண்டும். பின்னர் அதனைத் தண்ணீரில் ஊறவைத்து மொடமொடப்பை நீக்கி, மண்ணில் புரட்டிப் பழையதாக்கி, அம்மாவிடம் பழைய ரிப்பன்தான் என்று சாதித்து விடலாம். நேற்று மாலை வகுப்புத் தோழி கனகாவிடம் கணக்குப் புத்தகத்தை அடகு வைத்து, அவளது ஒற்றை ரிப்பனைக் கடன் வாங்கி, ப்ளேடால் பாதியாக வெட்டி, ரெட்டை ஜடையிலும் பின்னியிருந்தாள். புது ரிப்பன்களில் ஒன்றைக் கொடுத்து கணக்குப் புத்தகத்தைத் திருப்ப வேண்டும். புத்தகம் இல்லாததால், செய்யாமல் விட்ட வீட்டுப் பாடத்தை, தமிழ் வகுப்பின் போது, கடைசி பெஞ்சில் அமர்ந்து காப்பியடிக்க வேண்டும். மாட்டிக் கொண்டாலும் தமிழம்மாக்கள் மட்டும் கடுமையாக தண்டிக்க மாட்டார்கள். அப்பாடி, எவ்வளவு வேலை... எவ்வளவு வேலை? புதினத்திலிருந்து சில வரிகள்: அலைப்பேசியை அணைத்த சரயுவின் காதில் அன்றொரு நாள் ஜிஷ்ணு சொன்னது காதில் எதிரொலித்தது. "நீ உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் உன்னை விடமாட்டேன். தேடி வருவேன்” என சொன்னதை நினைவுகூர்ந்தாள். ‘திருடன்... ஏதோ உணர்ச்சி வேகத்துல சொன்னான்னு நெனச்சேன். இவ்வளவு சீரியஸா இருந்திருப்பான்னு கற்பனை கூட பண்ணலையே’ என தனக்குள் பேசிக்கொண்டாள். வரவேற்பரையில் மாட்டியிருந்த சித்ராங்கதா ஓவியத்தின் மேல் சாய்ந்து நின்றவள் முகம் வேதனையால் தவித்தது.