நான் தேடிய தேவதை
Naan Theatiya Theavathai
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Add to Cartராஜேஸ்வரி அம்மாள் பூஜையறையில் விளக்கேற்றி... 'கந்தர் சஷ்டி கவசம்’ பாடிக் கொண்டிருந்தார்! காலை உணவை சமைத்து விட்டுதான் ராஜேஸ்வரி அம்மாள் பூஜையறைக்குள் நுழைந்தார்! எத்தனை வேலைக்காரர்கள் இருந்தாலும்... தனது கணவருக்கும், மகனுக்கும் பார்த்துப் பார்த்து சமைத்து... தன் கையாலேயே பரிமாறுவார்! வேலைக்காரர்கள் சுத்தம், சுகாதாரம், சமையலுக்குத் தேவையான காய் கறிகளை நறுக்கித் தருவார்கள்! கணவன் மேலும், மகன் மீதும் பெரும்பாசம் கொண் டவர்! எத்தனைப் பார்த்துப் பார்த்து வேலைக்காரர்கள் சமைத்தாலும்... பெற்ற தாய்... தனது அன்பையும், அக்கறையையும், பாசத்தையும் கலந்து சமைப்பது போல இருக்காது என்பதால்... உடம்புக்கு முடியவே இல்லை யென்றாலும்... பெரும் சிரமப்பட்டு... அடுப்பருகில் நின்று கிண்டி, கிளறி, தாளித்து என்று உணவைச் சமைத்து விடுவார்! வேலைக்காரர்களுக்கு பின்புறம் குடியிருப்பு வீடுகள். உண்டு! அங்கே அத்தனை பேருக்கும் உணவு சமைக் கப்படும்! முரளிதரன் - ராஜேஸ்வரியின் ஒரே தவப்புதல்வன், ஆனந்த இனியன்! நீண்ட, பத்து வருட காத்திருப்பிற்கு பிறகு பிறந்தவன், ஆனந்த இனியன்! ஆனந்த இனியன் குளித்துவிட்டு... ஆகாய வண்ண முழுக்கை சட்டையும், கறுப்பு பாண்டும் அணிந்தான்! தலையை வலது புறம் வகிடெடுத்து சீவினான்! செண்டை எடுத்து மேலே பீய்ச்சினான்!