book

கம்பன் காட்டும் இந்திரசித்தன்

Kamban Kaatum Inthirachithan

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம், ஆய்வுக் கட்டுரை, சிந்தனை
Out of Stock
Add to Alert List

நண்பர் தமிழருவி மணியனைச் சிறந்த அரசியல்வாதி என்றும், அரசியல்வாதியாக இருப்பினும் மறந்தும் தரம் தாழ்ந்து பேசாத ஓரு பண்பாளர் என்றும், சிறந்த சொல்லேருழவர் என்றும் இத்தமிழ் மக்கள் கருதியிருந்தனர், இருப்பார். 

அரசியல்வாதிகள் பலர் தங்கள் பேச்சுக்கு அரணாகத் தமிழ் இலக்கியங்களிலிருந்து சில கருத்துக்களை எடுத்து வீசுவதுண்டு. இவர்கள் ஒருவகையினர்.  அச்சொற்பொழிவோடு வரும் இந்த இலக்கியச் சிந்தனைகள் கேட்போர் உள்ளத்தைக் கவர்ந்தால் அப்பேச்சாளர் குறிப்பிட்ட இலக்கியத்திலும் வல்லுநர் போலும் என்று நினைப்பதுமுண்டு. அரசியலில் ஆழங்காற்பட்டவர்களில் இலக்கியத்தையும் பழுதறக் கற்று, தனிப்பட்ட முறையில் அந்த இலக்கியத்தைப் பற்றித்தனிச் சொற்பொழிவாற்றவும், நூல் எழுதவும் வல்லவர்கள் மிக மிகச் சிலரே ஆவர். இவர்கள் இரண்டாவது வகையினர்.

பெருங்காப்பியத்தில் பாத்திரப் படைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற திறனாய்வு இலக்கியத்தை அடியொற்றி, இந்திரசித்தன் என்ற பாத்திரம் எப்படிக் கவிச்சக்கரவர்த்தியால் போற்றி வளர்க்கப்பெற்று அவன் படைப்புகளில் ஈடு இணையற்ற பாத்திரமாக உருவாக்கப் பெற்றுள்ளது எனபதை 15 தலைப்புகளில் முழுமையாக்க் காட்டுகிறார்.

அ. ச. ஞானசம்பந்தன்.