வாழ்ந்தவர் கெட்டால்
Vaazhnthavar Kettaal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.நா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788192366890
Add to Cartதமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல்
பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர்
விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும்
கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி
இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும்
கூடியது வாழ்ந்தவர் கெட்டால்
நாவலின் பரப்பு சிறியது. பாத்திரங்களும் நிகழ்வுகளும் விரல் எண்ணிக்கையில்
அடங்கிவிடுபவை. ஆனால் இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான
அனுபவப் பெருவெளி பிரமிப்பூட்டக் கூடியது
மனித மனங்களின் புதிர்ப் பாதைகளில் நம்மைச் சுழற்றி எறிந்து திகைக்க
வைக்கிறது இப்படைப்பு. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு
மேதைமையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது