book

கடல் நிலம்

Kadal Nilam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயகிருஷ்ணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184760675
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், சம்பவங்கள், நிஜம்
Out of Stock
Add to Alert List

கடலின் மொழி அலையா... நுரையா..? ‍_ இந்தப் பாடலிலிருந்து மேலும் விரிகிறது கடலின் மொழி. யாருக்குமே புரியாமல் மிக ரகசியமாய், கடல்கோளாய், புயலாய், சுனாமியாய்... மனிதனை ஆட்டிப் படைக்கிறது! கடல் அள்ளிக் கொண்ட நகரங்களைப் பற்றி வரலாறுகளிலும் இலக்கியங்களிலும் படித்துக் கொண்டிருந்த நமக்கு, நம் காலத்திலேயே கடலின் வேறொரு முகம் தெரிந்துவிட்டது! குழந்தையைப் போல் கண்களை அகல விரித்துப் பார்த்துப் பழகிய சாதுவான கடல், திடீரென்று மிருகத்தின் கூரிய நகங்களைப் போல் கரையேறி வந்தபோது நாம் அடைந்த அச்சம் நமக்கே தெரியும். அந்த அச்சமும் இழப்பும் ஏற்படுத்திய வலிதான் இந்த கடல் நிலம் நாவல். 1964_ல் ராமேஸ்வரம் பகுதியில், கடும் புயலாலும் கடல் சீற்றத்தாலும் ஏற்பட்ட பேரழிவுகளை கண்முன் நிறுத்துகிறது. இயற்கையின் அந்தச் சீற்றத்தை நேரெதிரே பார்த்தவர்கள் இப்போது இதைப் படித்தால், காயங்களின் வலியை மீண்டும் அனுபவிப்பார்கள். அந்த அளவுக்கு உண்மையாகவும் ரத்தமும் சதையுமாகப் படைக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல். மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், நெய்தல் நிலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் விஜயகிருஷ்ணன். கவித்துவம் நிறைந்த அவரது மொழிநடை, நாவலுக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தரமான இலக்கிய நூல்கள் வரிசையில் கடல் நிலம் நாவலுக்கும் நிச்சயம் இடம் உண்டு.