book

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம்

Sri Padhanjali Yoga Soothram

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :336
பதிப்பு :12
Published on :2012
Out of Stock
Add to Alert List

யோக தர்சனப் பாதுகாவலரான பதஞ்சலி மஹரிஷியின் யோக சூத்ரங்களுக்கு விளக்கஉரையை எளிய தமிழில் புத்தகமாக வெளியிட முன்வந்ததே இந்நூல் பதினைந்து பதிப்புகளைத் தாண்டி விற்றுக் கொண்டிருப்பதற்கு காரணம். இந்த யோக தர்சனத்தை பிற மத ஆச்சாரியர்கள், ஸ்ரீமத் சங்கரர், ஸ்ரீ இராமாநுஜர் உள்பட தத்தம் பாஷ்யங்களில் கண்டித்துள்ளனர். இதே போல் அவர்களது மதங்களும் பிற மதாச்சாரியர்களால் கண்டிக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மை. பாராட்டுரை வழங்கியுள்ள விவேகானந்தா கல்லூரி தத்துவப் பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஸ்ரீ வேதவியாசரின் பிரும்ம சூத்திரத்தில் யோக தரிசனம் தள்ளப்பட்டிருந்தாலும் அந்த வேதவியாசரே இந்தப் பதஞ்சலி சூத்திரத்திற்கு முதன் முதலில் வியாக்ஞானம் செய்திருக்கிறார் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். மற்றபடி ஸ்ரீராமாநுஜர் பிரும்ம சூத்திரத்திற்கு பாஷ்யமிடுகையில் எத்தனையோ மதங்களைத் தள்ளியிருக்கிறார். அதில் யோகமும் ஒன்று. ஆனால் எல்லா மதங்களும் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் ஸ்ரீமத் இராமனுஜ மதத்திற்கு மற்ற தரிசனங்களை விட யோகம் பல விஷயங்களில் நெருங்கியதாக இருக்கிறது என்றே இந்நூலின் உரையாசிரியர் காட்டியுள்ளார். படித்து பயனடையுங்கள்.