
மலரே என்னை நெருங்காதே
Malare Ennai Nerungaadhe
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
மலரே என்னை நெருங்காதே - வாசலில் கோலம் போட்டு முடித்துவிட்டு மாவுக் கிண்ணத்துடன் உள்ளே நுழைந்த மீனா குளித்து தலையில் டவலோடு சேர்த்து கொண்டைப் போட்டிருந்தாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. பால் கவரை உடைத்து.. காய்ச்சிவிட்டு குக்கரில் பருப்பை வேகப் போட்டாள். பாலை இறக்கி சர்க்கரை டிகாஷன் கலந்து தம்ளர்களில் ஊற்றிக் கொண்டாள், எழுந்துவிட்டிருப்பது திறந்திருந்த கதவு உணர்த்தியது. பாத்ரூம் சென்று முகம் கழுவிக் கொண்டு கட்டில் மீது வந்தமர்ந்தாள். “கூப்பிடணும்னு நினைச்சேன். நீயே வந்துட்டே பயங்கர தலைவலி மீனா.... வலியால் கண்களை சுருக்கியபடி காபியை எடுத்துக் கொண்டாள். “நேத்தே ரொம்ப லேட்டாதான் வந்தே! வந்ததுமில்லாம சாப்பிட்டு முடிச்சதும் ஆபீஸ் ஃபைலை பார்த்துட்டு நடுராத்தியிலே படுக்கப் போனே! பின்னே தலைய வலிக்காம என்ன செய்யும்?''
