book

வீர் சாவர்க்கர்

Veer Savarkar

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலந்தை.சு. இராமசாமி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :166
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689113
குறிச்சொற்கள் :வீரர், சரித்திரம், தலைவர்கள், வழக்கு
Out of Stock
Add to Alert List

இந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான தந்தரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. இங்கிலாந்து பத்திரிகைகள் இவருடைய ஒவ்வொரு அசைவையும் வரிந்துகட்டிக்கொண்டு செய்தியாக்கிக் கொண்டிருக்க, இந்தியாவில் இவரை சாமானியராகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கில அரசு இவருக்கு ஐம்பதாண்டுச் சிறை தண்டனை விதித்தபோதுதான் இவர்மேல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்தது.

போராளி. படைப்பாளி. காவிய நாயகன். சாவர்க்கரின் ஆளுமை பன்முகப்பட்டது. சரித்திரம் பதிவு செய்திருப்பது அவற்றில் ஒரு பகுதியைத்தான். இந்துத்வாவை சாவர்க்கர் உயர்த்திப் பிடிக்கக் காரணம் என்ன? இங்கிலாந்தில் அவர் மீது கல்லெறிந்தால் இந்தியாவில் அவருக்காகக் கோட்டையையே சாய்க்க இளைஞர்கள் தயாராக இருந்தார்கள், எப்படி? காந்திக்கும் சாவர்க்கருக்கும் ஒத்துப் போகாதது ஏன்? இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் காந்தியின் பக்கம் சாய்ந்து நிற்க, சாவர்க்கர் மட்டும் பாலகங்காதர திலகரின் பின்னால் அணிவகுக்கக் காரணம் என்ன?

பள்ளி நாள்களில் தொடங்கி, இறுதிக் காலம் வரை போராட்டம். அதிலும் அந்தமான் சிறையில் அவர்பட்ட சித்திரவதைகளும் அனுபவித்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரம் இன்னல்களுக்கு இடையிலும் போராட்ட குணம் கொஞ்சமும் குறையாமல் வாழ்ந்த மகத்தான வீரர் சாவர்க்கர். இலந்தை சு. இராமசாமியின் விரல்கள் வீர் சாவர்க்கரை நம்மோடு உலவவும் உரையாடவும் விட்டிருக்கின்றன