
ஆபிஸ் கெய்டு
Office Guide
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாது ஸ்ரீராம்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183687867
குறிச்சொற்கள் :திட்டம், உழைப்பு, சிந்தனைக்கதைகள்
Out of StockAdd to Alert List
பள்ளிக்கூடம் விட்டதும் குழந்தைகள் வீட்டுக்கு ஓடிவருவதுபோல் விட்டால் போதும் என்று அலுவலகத்தைவிட்டு ஓடிவருபவர்கள்தான் இங்கே அநேகம். கரும்புச் சக்கைபோல் கசக்கிப் பிழியும் ஓர் இடமாகத்தான் அலுவலகம் பலருக்கும் தோற்றமளிக்கிறது. பிரச்னை, போட்டி, பொறாமை, படுகுழி, ஆபத்து, சறுக்கல், ஏமாற்றம். ஆயிரத்தெட்டு பாலிடிக்ஸ்.
அலுவலகத்தை ஒரு கொண்டாட்ட வெளியாக மாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் அது சாத்தியமா? ஞாயிறு எப்போது முடியும், திங்கள் எப்போது வரும் என்று காத்திருந்து துள்ளி குதித்து ஆபீஸ் போவது சாத்தியமா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
இந்தப் புத்தகம் ஒன்று போதும். எப்போதும் கடுகடுவென இருக்கும் அதிகாரி உங்களைப் பார்த்ததும் புன்முறுவல் செய்யப்போகிறார். எப்போது கவிழ்க்கலாம் என்று கத்தியைத் தீட்டிவைத்துக்கொண்டு காத்திருக்கும் சக ஊழியர் உங்கள் தோள் மீது கைபோட்டுக் கதை பேசப்போகிறார்.
படுகுழிகளை அல்ல; அட்டகாசமான ஏணிப்படிகளை உங்கள் அலுவலகம் முழுவதும் இனி நீங்கள் கண்டுபிடிக்கப்போகிறீர்கள். எல்லோருக்கும் பிடித்த நபராக, எல்லோராலும் மதிக்கப்படும் ஒருவராக, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு சக்தியாக உங்களை நீங்கள் உருமாற்றிக் கொள்ளப்போகிறீர்கள்.
புத்துணர்ச்சியூட்டும் புத்தம்புதிய கதைகளுடன் ஒரு பூங்கொத்து இதோ.
