
தொல்காப்பியரின் கவிதையியல் டி.என்.ஏ. அணுகுமுறை
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பொ.நா. கமலா
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789393358042
Add to Cartதமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தின் கவிதையியலை மனித உயிரணுவின் ஒரு கூறான டிஎன்ஏ-வோடு தொடர்புபடுத்தி ஆராய்ந்தனைக்கான காரணிகளை விளக்கிக் கூற விழைகிறேன்.டிஎன்ஏ எவ்வாறு இரட்டைச் சுழல் வடிவம் உடையதாய், ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கிறதோ அது போன்று, எதிர்வுகளாலாகிய கருத்தாடலும் பலவாகிய எதிரும் புதிருமான எடுத்துரைப்பு இழைகளாலாகிய பொருண்மைகளோடு கூடி, ஒன்றையொன்று கடந்தும் முரண்பட்டும் அமைகிறது. தொல்காப்பியக் கவிதையியலில், அகத்திணையும், புறத்திணையும் எதிர்வுகளாயினும் ஒன்றோடு பின்னிப்பிணைந்து டிஎன்ஏ-விலுள்ள குரோமோசோம்கள் போலக் கிடக்கின்றன.
