book

உரிமை காத்த உத்தமர்கள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :சிபி பதிப்பகம்
Publisher :Sibi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

தனது தள்ளாத வயதிலும் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து சமூக நீதிக்காக போராடிய தலைவர் பெரியார், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழந்த உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர் பெரியார். காலங்காலமாக அவமானச் சேற்றில் புதைந்து கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுச்சி ஊட்டியவர் டாக்டர் அம்பேத்கர். இந்தியாவின் அரசியல் சட்டத்தை இயற்றியவர். தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, மாநில முதல்வராகவும், இந்தியாவின் பிரதமர்களை தேர்வு செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவராகவும் உயர்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். இவர்கள் மூவரையும் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த ஆசிரியரைப் பற்றிய குறிப்பு நூலாசிரியரின் நிஜப்பெயர் சோழராஜன். மதுரை மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். ஆதனூர் சோழன் என்ற பெயரில் வாழ்க்கைக்கதை, அறிவியல், வரலாறு, பொது அறிவு நூல்களை எழுதியிருக்கிறார்