book

மீன லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்)

Meenam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பண்டிட் கேசவர்மா
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையில் சோதனைகள், துயரங்கள் சூழும்போது, ஜோதிடர்களை அணுகி ஆறுதல் பெற விரும்புவார்கள். தங்கள் நம்பிக்கைக்குரிய ஜோதிட வல்லுநர்களை நாடிச்சென்று தங்கள் வாழ்க்கை குறித்து கேட்டு நிம்மதி கொள்வர். பரிகாரம் ஏதேனும் செய்யும்படி ஜோதிடர்கள் பரிந்துரைத்தால் அதைச் செய்து, சிரமம் நீங்கி வாழ்க்கையில் நிம்மதிகொள்ள முயலுவார்கள். அந்தச் சிரமத்தை இலகுவாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதே இந்நூல், நீங்கள் பிறந்தது முதல் வாழ்வை நிறைவு செய்யும்வரை ஒவ்வொரு லக்னக்காரர்களின் குணநலம், அதிர்ஷ்டம், ஆயுள், கல்வி, படிப்பு குடும்ப வாழ்க்கை எவ்வாறெல்லாம் இருக்கும் என்று ஒரு லக்னக்காரரின் ஆயுளின் முழுப்பலன்களையும் உள்ளடக்கிய நூல் இது. இது பொதுவான லக்னத்தின் தன்மைகளே! வேறு தசா, புக்தி, அந்தரம் போன்ற காரணங்களால் பலன்களின் தன்மை மாறுபடலாம் இந்த அரிய ஆயுள்பலன் தொகுப்பைச் செய்திருக்கும் பண்டிட் கேசவசர்மா ஜோதிட சாஸ்திரம் பார்ப்பது, ஜோதிட ஆய்வுகளைச் செய்வது போன்ற பணிகளில் கால் நூற்றாண்டுகால அனுபவம் உள்ளவர். மீன லக்னக்காரர்களே! உங்கள் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எந்த வகையிலே அமைந்திருக்கும் என்பதை உங்கள் ஜாதகத்தை வைத்து, இந்நூலின் கருத்துகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கையைச் சிறப்புற அமைத்துக் கொள்ளலாம் அதற்கு உங்களுக்கு இந்நூல் ஒரு நல்வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறோம்.