book

ஸ்ரீலலிதா.த்ரிசதீ.ஸ்தோத்ரம் (பாராயத்திற்குரியது

Srilalitha Tristhi Stothram (Paarayathirkuriyadhu)

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
Publisher :Sri Ramakrishna Math
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

ஸ்ரீலலிதா-த்ரிசதீ-ஸ்தோத்திரம் பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானப் பகுதியில் உள்ளது. லலிதோபாக்கியானம் ஹயக்கிரீவருக்கும் அகஸ்தியருக்கும் நிகழ்ந்த ஸம்பாஷணை வடிவில் இருக்கிறது. இதில் லலிதாதேவியின் சரித்திரம், மாஹாத்மியம், நியாஸம், பூஜை, புரச்சரணம், ஹோமம், ஸ்தோத்திரம், ரஹஸ்யம் எனப்பல பிரிவுகள் இருக்கின்றன. ஸ்தோத்திரப் பகுதியிலுள்ளவை லலிதா ஸஹஸ்ர நாமமும் லலிதாத்ரிசதீ ஸ்தோத்திரமும். ஸஹஸ்ர நாமத்தையும் மற்ற ஸ்தோத்திரங்களையும் கேட்ட பின்னும் அகஸ்தியர் மனதில் பூர்ணமான திருப்தி ஏற்படாமல் அதைப்பற்றி ஹயக்ரீவரிடம் தெரிவித்துக் கொண்டபோது பரதேவதையின் திருவருளை நினைத்து பரதேவதையின் கட்டளையால் இந்த ஸ்தோத்திரம் உபதேசிக்கப்பட்டது என்பது வரலாறு. இது பரிபூர்ண மான மனச்சாந்தியை அகஸ்தியருக்கு அளித்தது போல எல்லோருக்கும் அளிக்கவல்லதாகையால் 'ஸர்வபூர்த்தி கரம் ஸ்தவம்' எனச் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. இது பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களில் ஒவ்வொன்றிற்கும் இருபது நாமங்களாக முன்னூறு நாமங்கள் கொண்டது. இதற்கு ஆதிசங்கரர் விரிவுரை எழுதியிருக்கின்றார். ஸம்ஸ்கிருதத்தில் அதிகப் பயிற்சி இல்லாதவர்களுக்கும் ரஹஸ்யார்த்தங்களைத் தமிழில் சுருக்கிக் கூறுவதற்காக இந்நூல் வெளியிடப்படுகிறது.