book

பொட்டல் கதைகள்

Pottal Kathaigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411507
Out of Stock
Add to Alert List

பொன்னீலம் தமிழகத்தின் முதன்மைப் படைப்பாளிக்குள் ஒருவர். இவரது புதிய தரிசனங்கள் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி சிறப்பித்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், கவிதை நூல், மொழிபெயர்ப்பு நூல்கள் பயண நூல் என்று இடையறாது பயணிக்கிறார் இவர்.

தமிழ் இலக்கியத்தில் தீவிர மார்க்சிய கண்ணோட்ட படைப்பாளரான பொன்னீலன் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்தேசி சம்மேளனத்தில் தேசிய உறுப்பினராகவும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் பொதுச் செயலாளராகவும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் கொச்சி பல்கலைக்கழகத்தின்அயல்மொழித் துறை 
 பேரவை உறுப்பினராகவும் இயங்கி வருகிறார்.

அத்தாணிக் கதைகளின் தொடர்ச்சியாக வெளி வருகிறது இந்த 'பொட்டல் கதைகள்' எங்கள் பொட்டல் வட்டாரச் செவ்வல் காட்டுக்கதைகள்.  இவை பெரும்பான்மையும் என் நாட்குறப்புகளில் குறித்துத் தொகுக்கப்பட்டவை.  கதைகளை நான் அப்படியே தரவில்லை.  அதன் உள்ளழகு பளிச்சென்று தெரியும் வகையில் தலைசீவிப் பூமுடித்து, பொட்டும் வைத்திருக்கிறேன்.  கதைகளின் அசல் தன்மையில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாதவாறு இவைகளைக் கவனமாகச் செய்திருக்கிறேன்.

பொன்னீலன்