book

மாயாவனம்

Maayavanam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936655
Out of Stock
Add to Alert List

தாய், தந்தை, பாட்டி என்ற அழகான ஒரு குடும்பத்தின் கதாபாத்திரங்களோடு சில வேறுபட்ட கதாபாத்திரங்களையும் சேர்த்து, த்த்துவாரத்தங்களோடு இந்தப்படைப்பை எழுதியுள்ளார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள்.

இன்று, பெண்களைப் பெரிதும் பாதிக்கும் மெகா தொடரின் தாக்கத்தையும்,அதனால் எந்த அளவு சில பெண்களின் அறிவு தவறிப்போகிறது என்பதையும் படிப்பவரை சிந்திக்கத் தூண்டும்விதமாக வைஜெயந்தி கதாபாத்திரத்தை உலவ்விட்டுள்ளார்.

அற்புத சக்திகளோடு ஒரு மனிதன் இன்றைய சூழலில் சிக்கினால் மனித சமுதாயம் அவனுடைய சக்தியை சோதனை என்ற பெயரில் என்ன பாடுபடுத்தும் என்பதைப் பற்றிய கற்பனை, நம்மை ரசித்துப் படிக்கத் தூண்டுகிறது.

மனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழ ஆசைப்படலாம்;  ஆனால் நம் வாழ்க்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது என்பதைத் தெளிவாக விளக்குகிறது மாயாவனம் நாவல்.

- பதிப்பாளர்