book

விரல் நுனியில் வாட்

Viral Nuniyil What

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ல‌க்ஷ்மி கைலாசம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189936150
குறிச்சொற்கள் :பணம், வரி, செயல்முறைகள், தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம், தகவல்கள்
Add to Cart

அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வணிக நடவடிக்கையின்போதும், பொருளின் விலையோடு சேர்த்து வரியாக குறிப்பிட்ட அளவு பணம் செலுத்துகிறோம். அது அரசாங்கம் நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரமாக இருக்கிறது. மேலும் நாட்டின் முன்னேற்றத் திட்டங்கள் செயல்படவும், கட்டமைப்பு வசதிகள் மேம்படவும் தேவையான பணத்தை வரிகள் மூலமே அரசாங்கம் திரட்டுகிறது.
நம் பாரம்பரிய வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சாணக்கியர் காலத்தில் இருந்த வரி நடைமுறைகள் எப்படி இருந்தன என்பதையும், எந்த அளவுக்கு குடிமக்களிடம் வரி விதிக்கப்பட வேண்டும் என்று வகுத்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியலாம். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள், நம் பண்டைய வாழ்க்கை நெறிகளை வெளிப்படுத்துவது. அதில் ஆட்சிமுறை குறித்த அறிவுரைகளும் உண்டு.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள்:756) மன்னரை வைத்தே ஆட்சி தீர்மானிக்கப்படுகிறது என்பதால், அரசு நடத்தத் தேவையான பணத்தை ஆட்சியாளன் எவ்வகையில் தேடலாம் என்பதை வள்ளுவர் வாய்மறை இப்படி விதிக்கிறது. நிலவரியாக வந்த பொருளும், சுங்க வரியாக ஈட்டிய பொருளும், கப்பம் மூலம் வரும் பொருளும் மன்னன் பொருள் ஈட்டும் முறைகள் என்று தெரிவிக்கிறது.

இன்றும் ஆட்சிக்குத் தேவையானதை வரிகளே ஈடுசெய்கின்றன. அந்த வகையில் நம் நாட்டில் நடைமுறையில் இருந்த சிக்கலான விற்பனை வரியை மாற்றியமைத்து, எளிமையான மதிப்புக்கூட்டு வரியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். முதலில் சற்று கடினமாகத் தோன்றும் இந்த வரிமுறை, பழக்கத்திற்கு வந்துவிட்டபிறகு எளிமையாகத் தெரியும். வணிகர்களுக்கும் மக்களுக்கும் இந்த முறையை விளக்கும் வகையில் இந்த நூல் துணை செய்யும். வரி கணக்கிடும் செயல்முறைகளை, வரி கட்டும் நடைமுறைகளை எளிதாகப் புரிந்து கொள்ள இந்நூல் கை கொடுக்கும்.