book

தகனம்

Thaganam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆண்டாள் பிரியதர்ஷினி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :137
பதிப்பு :5
Published on :2005
ISBN :9788123407050
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

மனிதனின் வாழ்வு கருவறையில் தொடங்கிக் கல்லறையில் முடிகிறது. பெண்ணுக்குள் தொடங்கி மண்ணுக்குள் அடங்குகிறது. உலகமெனும் மைதானத்தில் விளையாடிய மனிதன் மயான பூமியில் ஓய்ந்து உணர்வற்று உறங்குகிறான். சுடுகாடு சென்றடையும் வரை அலன் படும்பாடு பெரும்பாடு. ஆண்-பெண் இருவருடைய இன்பத்தின் சின்னமாகப் பிறந்த மனிதன் துன்பத்தைக் கட்டிச் சுமந்து சோர்வுற்று, உயிரிழந்து, பிணம் என்ற பெயர், பெற்று படுத்த நிலையில் பயணம் செய்து சென்றடையும் இடம் மயானம். மயானத்தில் பிணங்களை எரிப்பதைப் பணியாகக் கொண்டு பசிக்கு இரை தேடும் அவல வாழ்க்கை வாழ்கின்ற மக்களைப் பற்றிய கதைதான் தகனம் என்று இந்த நாவல்.