சித்தரஞ்சனி
Siththaranjani
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :18
Published on :2017
Out of StockAdd to Alert List
உயர்ந்து வானளாவிய மலைகளுக்கிடையில் வாசிஷ்டி நதியென்றும் தெற்குப்
புறத்திலிருந்த அஞ்சன் வேல் கோட்டையின் காரணமாக அஞ்சன்வேல் நதியென்றும்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புண்ய நதியின் வடக்குப் பகுதியிலிருந்த
துறைமுகத்தின் மீது தாக்கிய கடலலைகள் காலை வெயிலில் வெள்ளிப் பாளங்களைப்
போல் காட்சியளித்தன. வாசிஷ்டி நதியும் பச்சிமக் கடலில் (அரபிக் கடலில்)
வேகமாகப் பாய்ந்து கலந்த காட்சி, யுவதியொருத்தி காதலனை அணுகும்
ஆத்திரத்தைப் புலப்படுத்தியது. அந்த நதி மலைச்சரிவிலிருந்து உதிர்ந்த
புஷ்பங்களைத் தனது நீரில் சுழலவிட்டு மலர்க்கிரீடங்களைச் சமைத்துக்கொண்டது
தனி அழகை அந்த ஆற்றுக்கு ஏற்படுத்தியது. தவிர தாபோல் மலைக்காட்டிலிருந்த
விருட்சங்கள் லேசாகக் காற்றில் அசைந்ததால் வண்ணமலர்களும் காய்ந்த
சருகுகளும் சேர்ந்து விழுந்து வாழ்க்கை புஷ்பிப்பதோடு காயவும் செய்யும்
என்ற தத்துவத்தை விளக்கின. இந்த அழகையெல்லாம் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு
நின்ற கௌதமிபுத்ரன் மலைச் சரிவில் இறங்கிச் சென்று வாசிஷ்டி நதியில்
நீராடிப் புரவியில் தொங்கவிட்டிருந்த மான் தோல் பையிலிருந்து புத்துடை
அணிந்து பையில் எப்பொழுதுமிருந்த சந்தனத்தையும் நெற்றியில்
தீட்டிக்கொண்டான். பிறகு நதியில் மீண்டுமொரு முறை இறங்கிக் காலைக் கடனை
முடித்துக்கொண்டு கோவிலுக்கு வந்து பத்மாசனம் போட்டுக்கொண்டு பிராணாயாமம்
செய்தான். அவன் அனுஷ்டானங்கள் முடிவதற்கும் உச்சிக்காலம் வருவதற்கும்,
நேரம் சரியாயிருந்ததால் வயோதிக பூஜாரியும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.
கோவிலுக்குக் கதவு ஏதுமில்லாதிருந்ததால் அவர் நேராக உள்ளே சென்று
அங்கிருந்த செப்புக்குடமொன்றை எடுத்து வந்து ஆற்றிலிருந்து நீர் மொண்டு
வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். பிறகு தான் கொண்டு வந்த
மூட்டையிலிருந்த பிரசாதத்தைச் சுவாமிக்கு நிவேதனம் செய்தார். அதை
கௌதமிபுத்ரனுக்கும் கொடுத்துத் தாமும் உண்டு விட்டுக் குடத்தில்
மீதியிருந்த நீரை அந்த வாலிபனுக்கும் கொடுத்துத் தாமும் அருந்தினார். பிறகு
மிகுந்த களைப்பினால் அப்படியே கோவில் வாயிலில் படுத்தார். “குழந்தாய்!
இன்னும் நான்கு நாழிகைகள் நாம் இங்கு இருக்கலாம். பிறகு, புறப்படுவோம்”
என்று சொன்னார்.
“எங்கு சுவாமி?” என்று பயபக்தியுடன் கேட்டான் வாலிபன்.
“எனது குடிசைக்கு” இதைத் திட்டமாகச் சொன்னார் பூஜாரி.
“நான் வரவில்லை!” என்று பணிவுடன் கூறினான் கௌதமிபுத்ரன்.
“ஏன்?”
“ஒரு நள்ளிரவு சந்நிதியில் படுக்க வேண்டுமென்று எனது தாய் சொல்லியிருக்கிறாள்.”
“இரவு இங்கு படுக்க வேண்டுமா?”
“ஆம். அப்படித்தான் பிரார்த்தனை.”
“அந்தப் பிரார்த்தனையை விட்டுவிடு.”
“பிரார்த்தனையை எப்படி விட முடியும்?”
“ஒன்று பிரார்த்தனையை விடவேண்டும் அல்லது பிராணனை விடவேண்டும். எதைச் செய்யப்போகிறாய்?”
“சுவாமி! நான் என்றும் உயிருக்குப் பயந்தது கிடையாது. தவிர பிரார்த்தனை இத்துடன் முடியவில்லை.”
“வேறு என்ன பிரார்த்தனையோ?”
“சண்டிகாதேவியைத் தரிசிக்க வேண்டும்.”
இதைக் கேட்டதும் படுத்திருந்த பூஜாரி சரேலென எழுந்திருந்து அவனை நோக்கினார். “உனக்குப் பைத்தியம் ஏதுமில்லையே?” என்றார்.
“இல்லை ஏன்?” என்று வினவினான் கௌதமிபுத்ரன்.
“சண்டிகாதேவி ஆலயம் பாதாளத்திலிருக்கிறது” என்றார் பூஜாரி.
“இருந்தாலென்ன?”
“அதை, சித்தரஞ்சனியும் தரிசிக்கிறாள் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில்.”
“மோகினியா?”
“ஆம்.”
“மோகினியை நான் பார்க்கிறேன்!”
“பார்க்கலாம். பிழைக்க மாட்டாய்” என்று எச்சரித்தார் பூஜாரி.
“ஏன் பிழைக்கமாட்டேன்? என்னை என்ன செய்து விடும் மோகினிப் பிசாசு?” என்று கேட்டான் கௌதமிபுத்ரன் புன்முறுவலுடன்.
“உன்னை முறித்துப் போட்டுவிடும்” என்றார் பூஜாரி.
அவர் அச்சுறுத்த அச்சுறுத்த அந்தப் பிசாசைப் பார்த்துவிடுவது என்று தீர்மானம் செய்துகொண்டான் சாதவாகன வாலிபன். அவன் பிடிவாதத்தைப்பார்த்த பூஜாரி தனது மடியிலிருந்து விபூதியை எடுத்துக்கொடுத்து, “உன்னைத் தாபிலேசுவரன் காக்கட்டும்” என்று கூறிச் சென்றார். போகும்போது உள்ளூரச் சொல்லிக்கொண்டார், “நாளை உனது சடலத்தை எடுத்துச் செல்ல வருகிறேன்” என்று.
மாலை மெள்ள மெள்ள முற்றியது. மலையும் கடலும் நதியும் இணைந்த மாலை நேரக்காட்சி மனோகரமாயிருந்தது. அதைப் பார்த்துப் பரவசப்பட்டான் அந்த வாலிபன், “நள்ளிரவு வரட்டும். அந்த மோகினியைப் பார்க்கிறேன்” என்று உற்சாகத்துடன் காலத்தை ஓட்டினான் அவன்.
இரவும் முற்றியது. கடல் அலைகள் மீது மேகங்கள் ஊர்ந்து வந்து விண்ணை நோக்கிச்சென்றன.