book

வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்

Varma Kalaiyai Katru Kollungal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. முத்துகிருஷ்ணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :144
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List


மறைத்தே வைத்திருந்து மறைவாகவே செயல்படுவதுதான் வர்மக்கலை (அ) மர்மக்கலை. உடலில் மர்மமாக - அதாவது மறைபொருளாகக் காணப்படும் இடங்களைப் பயன் படுத்தி போர்க் கலையும், வைத்திய முறையும் செயல்படுத்தப் பட்டன; செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திட்டமிட்டு, மர்மப் பகுதியில் தாக்கும் கலை, அதாவது வலிந்து தாக்கும் கலை, வன்மக்கலை... அதன் திரிபு வர்மக்கலை என்றும் நாம் பொருள் கொள்ளலாமல்லாவா?
வர்மக்கலை அழியாதது; அருமையானது; வைத்தியக் கலை களில் ஈடு இணை அற்றது; எளிமையானது; ஏழைக்கும் கூட எளிதில் கிடைக்கக் கூடியது வர்மமோ, மர்மமே; மாயமோ ஜாலமோ அல்ல. விஞ்ஞான ரீதியில் ஆனது.
ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டது வர்மக்கலை.. இது அடுத்தவனின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலை அல்ல. ஆக்கபூர்வமானது! அநாதரவான நேரங்களில் ஆபத் பாந்தவனாகச் செயல்பட வல்லது இச் சீரிய கலை! எதிரியின் மர்மஸ்தானங்களில் அடித்தோ, தட்டியோ, தொட்டோ அவனைக் கணப்பொழுதில் நினைவிழக்கச் செய்து, அக் காலகட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமைந்த கலையே வர்மக் கலையாகும். தட்டி வீழ்த்தப்பட்ட ஒருவனை, மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய, மீண்டும் தட்டிவிடுவதும் மர்மக் கலையின் தர்மமாகும்!