book

சரிந்த சாம்ராஜ்யம்

Sarintha Saamrajyam

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :376
பதிப்பு :11
Published on :2010
Add to Cart

சிறிய தீவு. ஆனால், அதன் ஆதிக்கம் உலகின் எந்தப் பகுதியிலும் வியாபித்து இருந்தது. உலகம் பூராவிலும், அதற்கு வேட்டை நிலம் ஏராளமாக இருந்தது. எனவே அதற்கான இராணுவ பலமும், கடற்படை அமைப்பும், விமானவளமும், போதுமான அளவு உடையதாக இருந்தது. வெறும் போலி மதிப்புக்காக உலகைக் கட்டியாளவில்லை. பொருளாதாரச் சுரண்டலே, அதன் ஆதிக்கத்தின் அடிப்படை. அடிமைப் பட்டுக் கிடக்கும் நாடுகளின் தேவைகளைத் தெரிந்து, அந்தந்த நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களை மலிவாகப் பெற்று, அதனை முடிந்த பொருள்களாக மாற்றி, திரும்பவும் அந்தந்த நாடுகளுக்கே அனுப்பி, தன் நாட்டின் செல்வர்களுக்கு நிறைந்த செல்வமும் தொழிலாளர்களுக்கு முதல்தர வாழ்வும் தருவதுதான், அதன் ஆதிக்கத்தில் மறைந்து கிடக்கும் உண்மை. இந்த முறையில் ஒரு நூறாண்டு, இதுவரை வரலாறு கண்ட எந்த சாம்ராஜ்யமும் சாதிக்க முடியாததை, சுரண்டல் பணியை, வெகு வெற்றிகரமாகச் செய்து வந்திருக்கிறது அந்தச் சிறியதீவு.