book

மேகம் மறைத்த நிலா

Megam Maraitha Nila

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கரு. நாகராஜன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :146
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188048533
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

படிப்பும் பட்டமும் வாழ்வின்  கை விளக்காயினும், அனுபவம்  என்பது பாதையாகத்தான் அமையும். அதை இந்நாடகங்கள் நமக்கு சித்திரித்துக் காட்டுகின்றது. இளைஞனுக்குத் தேவை சுய சிந்தனையும், தன்னம்பிக்கையும் என்பதை எள்ளளவும் பின் வாங்காமல் முன்னோக்கி நகர்த்திச் செல்லும் விதத்தை இந்நூலாசிரியர் தோழர் திரு. கரு.நாகராசன் அவர்கள்  சிறப்பாக செய்திருக்கிறார். பாராட்டாமல் இருக்க  முடியாது. ஓர் இளைஞனின் குடும்பச் சூழலும், பெற்றோரும்தான் அவனுடைய வளரும்  வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்பதை தெள்ளத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கும்  கருத்துகள் அருமை. வாழ்வைத் தேர்ந்தெடுக்க வைப்பதும் தேடியலைவதும் இக்கால இளைய சமுதாயத்தினரிடம் நிறையவே உண்டென்பது தெளிவு. ஆகாயத்தில் கோட்டைக் கட்ட எண்ணும் சில இளைஞர்கள் மத்தியில் ஓர் இளைஞன் கிடைத்த  வாழ்வை  எப்படி  பயன்படுத்திக் கொண்டான் எனும்  உள் நோக்கம்  குறித்த விவாதங்கள் நூலில்  கிடைக்கும்.

                                                                                                                                                       - பதிப்பகத்தார்.