book

தொன்மவியல் கட்டுரைகள்

Thonmaviyal Katuraigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.யாழ்.சு. சந்திரா
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :109
பதிப்பு :2
Published on :2009
ISBN :9789380130040
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை,
Add to Cart

பாரதநாடு புராண மரபு சார்ந்தது. மக்களது அன்றாட வாழ்க்கை பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் முதலிய புராணங்களோடு பின்னிப் பிணைந்தவை. ஆகவேதான் இலக்கியங்களில் அவை ஊடாடிக் கிடக்கின்றன. ஆயினும், புராணங்கள் பற்றிய ஆய்வுகள் மேலை நாட்டுக் கொள்கைகளோடு இணைத்துக் காணப்படுகின்ற முயற்சிகள் இக்காலத்தவை. படைப்பாளியின் வாழ்வியல் எவ்வாறு இருந்தது என்று காண்பதைவிட அவனுடைய எண்ணங்கள் எவ்வாறு இருந்தன என்று  காண்பதே சிறந்த உத்தியாகும். தொன்மவியல் என்ற இலக்கிய வகை இத்தகைய ஊடகங்களின் மூலம் செல்லும் போது எத்தகைய கோணங்களில் செல்லுகின்றன  என்பதை அறிய முடியும். இந்நூலின்கண் பல இடங்களில் இச்சிறப்பு நெறி  புலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொன்மவியல் ஆய்வுக் கட்டுரைகளை உண்மையாகவும், மாண்பாகவும்  அரிய நுழைபுலமாகவும்  பல கருத்துக்களைக் கொள்கைகளாக நிலைநாட்டியுள்ளமை தமிழ் கூறு நல்லுலகம் முழுவதும் அறிந்து மகிழும் என்பதில் ஐயமில்லை.