book

சுகப் பிரசவமும் தாய் சேய் நலமும்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

கருத்தடை உபகரணங்களை பயன்படுத்தியும் சில வேளைகளில் ஏற்படக்கூடிய கர்ப்பம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுதலின் பேரில் கருச்சிதைவு அனுமதிக்கப்படுகிறது. தாயை பாதிக்கும் சமூக பொருளாதார சூழ்நிலைகளில் கருச்சிதைவு அனுமதிக்கப்படுகிறது.மேற்கூறிய சட்டத்தின்படி, மருத்துவ முறைபடி கருச்சிதைவை, பதிவு பெற்ற, பிரசவ மற்றும் பெண்கள் நோய் பிரிவில் அனுபவம் வாய்ந்த, பரிந்துரைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் மாத்திரமே செய்ய வேண்டும். கர்ப்பம் 12 வாரங்களுக்கு உட்பட்டிருப்பின் ஒரு தனி மருத்துவ நிபுணர் மற்ற மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருச்சிதைவு செய்யலாம்.ஆனால் கர்ப்பம் 12 வார காலங்களுக்கு மேற்பட்டிருப்பின், இரண்டு மருத்துவ நிபுணர்கள் ஒன்றுகூடி பேசி முடிவெடுத்த பின்னர், அவர்களுள் ஒருவர் கர்ப்ப காலத்தினை முடிவுக்குக் கொண்டு வரலாம். கர்ப்ப காலம் 20 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களாயிருக்கும் போது, கர்ப்ப காலத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அவசரநிலை ஏற்படும்போது தனி ஒரு மருத்துவ நிபுணர் மற்ற எந்த மருத்துவரையும் கலந்தாலோசிக்காமலும் மற்றும் அங்கீகாரம் பெறாத மருத்துவமனையிலும் கருச்சிதைவு முறையினை செய்யலாம்.