book

நம்பர் 1 நீங்களும் ஆகலாம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரஞ்சன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2010
Out of Stock
Add to Alert List

நம்பர் 1.. நீங்களும் ஆகலாம்” என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் “பயோடேட்டா” எழுதுபவர் என்றால் எளிதில் புரியும். முன்னுரையில் குமுதம் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன், அமெரிக்காவில் உள்ளது போல சிறு சிறு அத்தியாயங்களுடன் ஒரு சுய முன்னேற்ற புத்தகம் எழுத வேண்டும் என்று கூறி ரஞ்சனிடம் இந்த புத்தகம் எழுத சொன்னதாக சொல்கிறார். ரஞ்சன் தன்னுரையில் வந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறார். தொடர் வெளி வந்த போது, வாசித்து விட்டு தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், இவர் வீடு தேடி வந்து விட்டதாகவும், கிடைக்காமல் போன சில அத்தியாயங்கள் இவரிடம் வாங்கி சென்றதாகவும், தன் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இந்த புத்தகமே காரணம் என அவர் சொன்னதாகவும் சொல்கிறார் !! புத்தகம் அந்த நபர் சொன்ன அளவு இருந்ததா என்றால், ஓரளவு மட்டுமே என்று தான் சொல்ல வேண்டி உள்ளது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு குட்டி கதை சொல்லி, அதனை ஒட்டி சில கருத்துகள் சொல்கிறார். உதாரணத்திற்கு ஒரு கதை.