book

நீதியின் குரல் பாகம் 2

₹750
எழுத்தாளர் :டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :399
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

சென்னை:முன்னாள் நீதிபதி லட்சுமணன் எழுதிய, "நீதியின் குரல்-பாகம் 2' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.குமுதம் பதிப்பகம் சார்பில் நடந்த விழாவில், குமுதம் பதிப்பக மேலாண்மை இயக்குனர் வரதராஜன் வரவேற்றார். ஐகோர்ட் நீதிபதி ஜெகதீசன் "நீதியின் குரல்'புத்தகத்தை வெளியிட, மூத்த வழக்கறிஞர் காந்தி பெற்றுக் கொண்டார்.விழாவில், ஐகோர்ட் நீதிபதி ஜெகதீசன் பேசியதாவது:நீதிபதி லட்சுமணன், 23 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 13 ஆண்டுகள், ஐகோர்ட் நீதிபதியாகவும், ஐந்தாண்டுகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் பதவி வகித்து, ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகளில், உடனுக்குடன் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி, நுகர்வோர் உரிமைகள், பெண்களும் சட்டமும் என, 25 தலைப்புகளின் கீழ், புத்தகத்தில் தகவல்களை பதிவு செய்துள்ளார். சில தீர்ப்புகள் வழங்க, அரசு குறுக்கீடுகள் ஏற்பட்டது குறித்தும் பதிவு செய்து உள்ளார்.இவ்வாறு, ஜெகதீசன் பேசினார்.